Tuesday, September 14, 2010

ஒருத்தி

நோகாமல் நிதமும்
மிதமாய் என்னை
தின்னத்தெரிந்த
ஒருத்தி,

பிரியாமல் என்னிடம்
பிரியம் காட்ட
பிணைப்பு இருக்கும்
ஒருத்தி,

வாராமல் என்னுடன்
பயணம் செய்ய
பார்த்திருக்கும்
ஒருத்தி,

பாராமல் என்னை
சோகக்கடலில்
நீந்தச்செயும்
ஒருத்தி,

காதோரம் என்னிடம்
கவிதை பேச
தமிழை தெரிந்த
ஒருத்தி,

விழியோரம் என்னிடம்
விடியல் காட்ட
வெளிச்சம் இருக்கும்
ஒருத்தி,

செய்யாத குறும்பை
செய்யப்போகையில்
சினுங்கள் காட்டும்
ஒருத்தி,

பொய்யாய் கோவம்
கொண்டிருந்தாலும்
கண்ணீர் சிந்தும்
ஒருத்தி,

உன்னையும் சோகத்தையும்
சுமந்தே
சுமை தாங்கியின்
சின்னமானேன்

உன்னால்
இடிபட்டே
மன குளவிக்குள்
சுன்னமானேன்

அழுகையை
சுமந்து சுமதே
உப்பு நீரின்
ஊற்றானேன்

சோகத்தை
சுமந்தே
கஷ்டத்தின்
இஷ்டமானேன்

கண்ணீரின்
பாதைகள்
பூமியைச்சென்று
அடைந்தன

விரைவில் நானும்!!!

Wednesday, August 25, 2010

Inspired a lot from the tune pogathey from the film deepavali,
so words came out,



நீதானே ! நீதானே !
என் மனதில் வேர்கள் விட்டாய்,

நீதானே ? நீதானே ?
பின் மனதை வேரருத்தாய் ?

சோகங்கள் யாவும்,
ஓடோடி போகும்,
அன்பாய் உன்னை தேடுதடி,

நாயென்று என்னை
நீ பார்க்க போதும்,
உயிரே உயிர் ஏங்குதடி,

வேதனைகள் கூட வேடிக்கைகள் ஆகும்
வீண் சண்டை வேண்டாமடி,

நீதானே? நீதானே?

தீராத சோகம் அதை நெஞ்சில் விதைத்தாய்,
முடியாத காதல் அதை முட்டி உடைத்தாய்,

என் தூக்கம்
வழியே நீ,
என் சாவை காண்பது போல்

கனவொன்று கண்டேனம்மா,
நிஜங்கள் தனை வெறுத்துவிட்டு,

வரம் ஒன்று கேட்டிருப்பேன்.. ஒ. ஒ. ஒ. ஒ.
தவம் செய்து பார்த்திருப்பேன் . .ஒ.ஒ.ஒ.ஒ

நீதானே? நீதானே?

இறங்காத கோபம் அதில் என்னை உதைத்தாய்,
திறக்காத காதல் அதில் என்னை சிதைத்தாய்,

உன் காலின் ஓரம் பார்த்து
எனது உயிர் பிரிவது போல்

எனக்கான ஞானம், தியானம்
இவை தானே அடைவதற்கு,

அன்போடு இல்லாமல் . . .
ஜீவனொன்று துடிக்கிறதே. .

நீதானே? நீதானே




Wednesday, May 19, 2010

பழைய புன்னகையில்
புதிய அர்த்தங்கள்,
தொய்ந்த கதைகளில்
இனிய திருப்பங்கள்,
நேற்றைய வினாடிகளில்
இன்றைய அலாரங்கள்,

உப்பு சப்பில்லாத அன்றைய நிமிடங்கள்
இன்று தித்திக்கிறது,
இதனை உன் அருகாமை ஆழமாய்
மெய்ப்பிக்கிறது,

ஏதோ ஒன்று உறுதி
செய்திருக்கிறது,

உன்னில் என்னையும்,
என்னில் உன்னையும்,
நம்மில் நமதையும்,
அனைத்தில் நம்மையும்,

நெஞ்சார்ந்து பார்க்கையில்
அனைத்து கவிதைகளும்
தோல்விகளே,

உண்மைகளை உண்மையாகவே காட்டும்
கவிதை கண்ணாடிகள் எது இங்கே ?

உன்னை நீயாகவே சொல்லும்
மொழியும் இல்லையே,

சிறந்த கவிதைகள்
படைக்க
மொழி ஆளுமை வேண்டும்,

நமது நிமிடங்கள்
எனக்கு போதும்
அச்சிறந்த கவிதைகளை
நான் மறக்க,

நீ அருகில் இல்லாமல்
பல வினாடிகள் பயனற்றவையாகவே
கழிகின்றன,

நீ அருகில் என்றாலோ
சில வினாடிகள் கழிந்தே பயனற்றவையாகின்றன,

எனக்கென்று
இறங்கி வந்த இமயம் நீ

எங்கிருந்தோ வந்தென்னை
கவ்விக்கொண்ட
கடல் காற்று,

எனக்கு பிடித்த
இரவுகளின்
ஒளிக்கீற்று,

வெளியில் தென்பட்ட மலர்களில்
தேன் தேடும்
தேனீக்களுக்கும், வண்டுகளுக்கும்
தெரியுமா?

எனக்கு உள்ளே
நான் சுமக்கும் ஆகயத்தாமரையான
உன்னை குடிப்பது
எவ்வாறென்று ?

என் இரகசிய
வெற்றிடங்களில்
நீ விசிறி அடித்த
வண்ணங்கள் தான் எத்தனை ?

எனக்கான
மேகக்கூடங்களில் இருந்து
துளிகளை பிரித்தளித்த
என் பிரியமான குளிர் காற்று,

தெரிந்தே நான்
மோத விரும்பிய
வேகத்தடைகள்,
உன் நடை கால்கள்,

தனித்திருக்கும் என்னை,
இப்படியான உன்னை (பற்றி)
எழுதச்சொன்னால்
நான் என்ன செய்ய ?
கவிதை எழுதிய
கடந்த காலங்கள்,
முற்றுபெற்ற
முற்றுப்புள்ளிகள்.

என் முன்னால்
உணர்வுகள் விழிக்கிறது,
என் தனிமை
அதற்கு
பொறுப்பு ஏற்கிறது.

நான் சமைக்கும்
சுரைக்காய்கள்
இன்று என் ஏட்டில்,

என் முதன்மையான
மூச்சு பயிற்சி,
உன் வாசத்தை
எதிர்பார்த்து
கிடக்க,

உனையே
உற்று நோக்கும்
விழிகளும்
பயிற்சி அற்று
துக்கத்தோடு
முடங்க,

உன் பேச்சிற்காக
குவிந்தே குளிர்ந்த
காதுகள்
நிஷப்தங்களை
நிராகரிக்க,

உள் நாக்கின்
தித்திப்பை மிஞ்சும்
உன் இதழ்களை
வருடாது, என் வாய்
தனியாய்
உளற,

என் மெய்யுள்ளே
மையாய் கரைந்த
என் மறு மெய் (மறுமை)
வேண்டிய
என் இம்மை (இம் மெய்)
விதிர்க்க,

உனக்கு தெரியுதா ?

என்
கடல் காத்து
கொதிக்குது,

கால் மண்ணு
தகிக்குது,

என்
நீரோர ஆலமரம்
வேரோரம்
விசும்புது,

என் கானல் ல கூட
நீர் இல்லையே,

காரணம்

என் காணல்ல
நீ இல்லையே,